Home Archive by category

இந்தியாவின் மத்தியஸ்துடனேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் பேசவேண்டும்

தமிழர்களின் தீர்வு தொடர்பில் மத்தியஸ்ததுடனான பேச்சுக்கள் நடைபெறுபோது இந்தியாவின் மத்தியஸ்த்தனுடனேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில்; பேசவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை என்பனவற்றிற்கு நியமிக்க்பபட்ட புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு இன்றைய தினம் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ரூபராஜ் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரது இடத்திற்கு பாத்தசாதியாவும் அண்மையில் உயிரிழந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதனின் இடத்திற்கு தேற்றாத்தீவினை சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமனம் பெற்றவர்கள் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் முன்பாக சத்திய பிரமானம் செய்து தமது உறுப்பினர் நியமனங்களை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்;பினர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொருத்தமட்டகலே நாங்கள் எக்காரணம் கொண்டும் ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் சமஸ்டி முறையிலான ஒரு தீர்வு தான் இந்த நாட்டிற்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால் இன்றைய செய்திகளின்படி அதாவது கடந்த 13 ஆம் திகதி அனைத்துக் கட்சி தலைவர்களையும் அனைத்து கட்சிகளையும் ஜனாதிபதி கூட்டி இருந்தார் அந்த அடிப்படையிலேயே நேற்றைய தினம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சி தலைவர்களை கூட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தார் ஆனால் அந்த அழைப்பு முன்னைநாள் சமாதான தூதுவர் நோர்வேயைச் சேர்ந்த எரிக்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றதாக ஒரு சந்தேகம் ஒன்று நிலவியது ஏனென்றால் நேற்றைக்கு முதல் நாள் எரிக்ஸ் அவர்கள் சம்பந்தன் ஐயா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவர்களை சந்தித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது ஆனால் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அல்லது ஜனாதிபதியிடம் இருந்தோ ஏனைய கட்சி தலைவர்களுக்கு தகவல்கள் வரவில்லை என்றும் சில வேளைகளில் எரிக்ஸ் அவர்கள் கூட்டத்துக்கு அழைக்கப்படுவார் என்று ரீதியிலும் நாங்கள் அந்த கூட்டத்திற்கு வர முடியாது என்பதனை விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

ஏனென்றால் தமிழ் தலைமைகள் ஒரு மத்தியஸ்தம் இந்த இன பிரச்சினைக்கு இருக்க வேண்டுமாக இருந்தால் அது இந்தியாவினுடைய மத்தியஸ்தம் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் ஏனென்றால் இந்த இலங்கை இந்தியா ஒப்புதத்துடன் சம்பந்தப்பட்டது இந்தியா.

அது மாத்திரமல்ல சர்வதேச ரீதியாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடரிலும் கூட இந்த இன பிரச்சனைக்கு நிரந்தரமான வடகிழக்கிலே தமிழர்கள் சுய நிர்ணய உரிமையுடன் சுதந்திரமாக வாழக்கூடிய முழு அதிகாரங்களும் பகிரப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதனை இந்தியா வலியுறுத்தி இருந்தது.

Related Posts