Home Archive by category

அரசியலுக்கு குட்பாய்- பிரபல பெண் இராஜாங்க அமைச்சர் திடீர் முடிவு!

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் திரும்பவும் கலைத்துறையில் பிரவேசிக்க உள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர், கீதா குமாரசிங்க, தெரிவித்திருந்தார்.

“குறிப்பிட்ட காலகட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் கோருவதை நிறைவேற்ற வேண்டும். நாம் தேவையானதை மக்களுக்கு செய்திருந்தால் ஏன் பயப்பட வேண்டும்?
 
நான் 30 வருடங்கள் சுவிட்சர்லாந்து பிரஜையாக இருந்தேன். அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள். அது எனது கணவரால் கிடைக்கப் பெற்றது. நான் அங்குள்ள பிரஜாவுரிமை உடன் இலங்கையிலும் பிரஜாவுரிமையினை பெற்றேன். நான் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட குடிமகளாக இருந்தேன். நான் நேர்மையானவள் எனக் காட்டுவதற்கு எனக்கு தேவை ஏற்பட்டது. எனினும், 2020 தேர்தலின் போது, இரட்டை பிரஜாவுரிமை நீக்கப்பட வேண்டும் என்பதினை நானும் விரும்பினேன். அப்போது நான் எனது இரட்டை பிரஜாவுரிமை இனை நீக்கிக் கொண்டேன். நமக்கு இங்கிலாந்தோ சுவிட்சர்லாந்தோ முக்கியமல்ல, நாம் வாழும் நாடு தான் நமக்கு முக்கியம். அதற்கு சேவை செய்தாலே போதும்..
 
கஞ்சா பயிரிடல் குறித்த யோசனையினை நான் முழுமையாக எதிர்க்கிறேன். எமது நாட்டிற்கு கஞ்சா தேவையில்லை. கஞ்சாவினால் வரும் வருவாயினை பயன்படுத்தி நாட்டினை முன்னேற்ற வேண்டிய தேவை இல்லை. கஞ்சாவினால் நாடு நாசமடையும். அதனை எவ்வாறு நாம் ஆதரிப்பது..? இப்போதுள்ள போதைப்பொருளையே நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை..
 
இதற்குப் பின்னர் நான் அரசியலில் இருப்பேனா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. நான் உண்மையாக கூறுகிறேன், எனது கலைத் துறையில் மீண்டும் காலடி எடுத்து வைக்கவே எனக்கு ஆசை. ஏனெனில் எனது உளரீதியான மகிழ்ச்சி அங்குதான் உள்ளதாக நான் அறிந்து கொண்டேன்.. எனினும் இருக்கும் இக்காலத்தில் மக்களுக்கு என்னால் இயன்ற சேவையினை வழங்க வேண்டும். அதற்காக கஞ்சா வளர்ப்போம் என எனக்கு கூற முடியாது.
 
மாணவர்களின் பாடசாலை பைகளை பரிசோதிக்கின்றனர். இந்த கஞ்சா இனை சட்டபூர்வமாக்கினால், பாடசாலை பைகளில் கஞ்சா இருந்தால்? மாணவர்கள் கஞ்சா எடுத்தாச்சி அடிச்சாச்சி என்ற நிலைமை தான்.. “ எனத் தெரிவித்திருந்தார்.

Related Posts