Home Archive by category

சீனாவில் திடீரென எலுமிச்சை பழத்தை தேடும் மக்கள்: காரணம் இதுதான்!

சீனாவில் கோவிட் நோய் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், சீன மக்கள் இந்த நோயை எதிர்த்துப் போராட உள்ளூர் முறைகளை நாடியதால் எலுமிச்சையின் தேவை வேகமாக அதிகரித்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் வசிப்பவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை வாங்குவதால் எலுமிச்சைக்கு அதிக தேவை இருப்பதாக எலுமிச்சை விவசாயிகள் கூறினர்.

தற்போதுள்ள எலுமிச்சை தேவைக்கு 14 மணிநேரம் உழைக்க வேண்டியுள்ளதாகவும், வாரத்திற்கு 5 முதல் 6 டன் எலுமிச்சை பழங்களை விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது 30 டன்கள் விற்பனை செய்வதாகவும் சீன ஊடகம் ஒன்றுக்கு விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Posts