Home Archive by category

அடிமையாக்கும் 'ஐஸ்' ஆயுளையும் குறையும்

ஐஸ் போதைப் பொருளைப் பயன்படுத்துவதால் நித்திரை வராது என்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் போதைப் பொருள் விற்பனையாளர்கள் பொய்களைப் பரப்பி வருவதாகவும் அதைப் பயன்படுத்துவதால் ஞாபகசக்தி குறையும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

ஏனைய போதைப் பொருட்களுடன் ஒப்பிடுகையில், ஐஸ் போதைப் பொருள் அதிகளவில் அடிமையாக்கும் திறன் கொண்டது என்றும் அதைப் பயன்படுத்துவோரின் ஆயுட்காலம் நிச்சயம் குறையும் என்றார்.
 
ஐஸ் போதைக்கு அடிமையானவர்களுக்கு பசி படிப்படியாக குறைவடைவதால் உடல் பலவீனமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பல்வேறு நோய்கள் தாக்கி அவர்கள் மரணமடைவார்கள் என்றும் வைத்தியர் நினைவூட்டினார்.

இந்த போதைப் பொருளால், பிள்ளைகளின் உடல் மற்றும் மனவலிமை பலவீனமடைவதாகவும் அதன் காரணமாக கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பிள்ளைகளின் மனதை குறித்த போதைப் பொருள் சிதைத்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், பிள்ளைகளின் வெளிச் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானம் செலுத்துவது அவசியமானது என்றார்.

Related Posts