மலேசியாவில் திடீர் நிலச்சரிவு - அதிகரிக்கும் பலியானவர் எண்ணிக்கை
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது.
இன்று(16) அதிகாலையில் திடீரென இடம்பெற்ற குறித்த நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பேரை காணவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்களினால் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட போது அந்த இடத்தில் 75 மலேசியர்கள் இருந்துள்ளதாக குறிப்பிட்ப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை
கோலாலம்பூர் வடக்கே 50 கிலோமீற்றர் தொலைவில், படாங் களி என்ற இடத்தில் இயற்கை விவசாய பண்ணையிலேயே விபத்து ஏற்ப்பட்டுள்ளது.குறித்த பிரதேசத்தில் 30 மீற்றர் உயரத்தில் இருந்து மண் சரிந்து, 3 கிலோமீற்றர் தூரம் வரை மண் மூடியள்ளது.
விபத்தில் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு 53 பேர் காயமின்றி தப்பியுள்ளனர்.
எனினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் 400 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு குறித்த நிலச்சரிவால் அந்த பகுதியில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.