Home Archive by category

நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசுபாடு நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்பிற்காக வாய் முகமூடியை அணியுமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஆபத்துக் குழுக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என டொக்டர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டுகிறார்.
 
"இந்த நேரத்தில், காற்றின் தரம் தற்காலிகமாக மோசமடைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் காற்றினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.என்றார்.
 
"இதுவரை அறிவிக்கப்பட்டபடி முக்கிய நாரங்களில் மோசமான காற்று நிலை பதிவாகி உள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற நகரங்களில்.

இந்த சுற்றாடல் நிலைமை இலங்கையால் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல."
 
இந்த நேரத்தில், முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது. அனில் ஜாசிங்க கூறுகிறார்.
 
தற்போது தீவின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 150 முதல் 200 வரை உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஆரோக்கியமற்ற அளவாகக் கருதப்படுகிறது.

Related Posts