Home Archive by category

யாழ்ப்பாணம் - சென்னை விமான கட்டணம் வெளியானது

வரும் பன்னிரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் - சென்னை விமான கட்டணம் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய ரூபாவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 9 200 இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

 ஒரு வழி பயணச்சீட்டு விபரமே இதுவாகும். அதேவேளை விமான பயணசீட்டு இருவழி பயண சீட்டும் ஒரே கட்டணமே வசூலிக்கப்படும் நிலையில் , யாழ்ப்பாணம்  - சென்னைக்கு போக ஒரு கட்டணமும் வர ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது  யாழில் விமானநிலைய நுழைவுவரி 60 டொலர் ரிக்கற்றில் உள்ளடங்குகிறது. ஆனால் இந்தியாவில் விமானநிலைய நுழைவு வரி இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts