Home Archive by category

பிரபல நடிகை ஒலிவியா நியூட்டன் ஜோன் காலமானார்

பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் நேற்று (08)  காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1948 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் ஒலிவியா நியூட்டன் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

கிரேஸ் என்ற பிரபல திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார், அதில் அவர் செண்டி என்ற பாடசாலை மாணவியாக நடித்து பிரபலமாகியிருந்தார்.  ஒலிவியா நியூட்டனுக்கு அவரது ரசிகர்கள் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts