Home Archive by category

அனைத்து மக்களும் திருப்தியடையும் தீர்வையே ஏற்றுக்கொள்வோம்; சுமந்திரன் தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அனைத்து மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவே முதலில் தீர்மானித்தோம். ஆனால், பின்னர் எதிராக வாக்களிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தோம். ஏனென்றால் அதிபர் கடந்த நாள்களில் பல சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.தமிழ்க் கட்சிகளை கலந்துரையாடுவதற்காக அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி அதிபருக்கு பதிலளித்து அவருக்கு எங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது.

இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டு வருடங்கள் பல ஆகின்றபோதும் ஒரு விசாரணைகள் ஏதும் நடக்கவில்லையே. சொற்கள் செயற்பாடுகளில் இருக்க வேண்டும்.

காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியது. பலாலி விமான நிலையத்தை சுற்றி காணிகளை விடுவிப்பதாக கூறிய போதும் அதனை நிறைவேற்றவில்லை. ஒருபுறத்தில் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் தொடர்பில் கூறுகின்ற போதும், மறுபுறத்தில் அதற்கு எதிரான விடயங்கள் நடக்கின்றன. அதனை விசாரிப்பதாக அதிபர் கூறியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என்றார்.

Related Posts