Home Archive by category

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை; ஜே.வி.பி.அறிவிப்பு

சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி. ஒருபோதும் பங்குதாரியாக இருக்காது என்று அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

 

சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதோடு, இவ்வாரத்திலும் ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்த தீர்மானித்துள்ளார்.

அந்தவகையில், நாளைய தினம் ஜே.வி.பியினரை சந்தித்து சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பாக ஜனாதபிதி பேச்சு நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்னெத்தி, நாளைய தினம் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் தமது கட்சி கலந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள நிலையில் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதில் எந்தப்பயனும் கிடையாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ளவே இவ்வாறான முயற்சிகளின் தற்போது ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, தங்கள் கட்சி ஒருபோதும் இவ்வாறான சர்வக்கட்;சி அரசாங்கத்தில் இணையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts