ரஷ்ய இராணுவம் வெளியேறியது: கெர்சன் நகருக்குள் நுழைந்து தேசிய கொடியை ஏற்றியது உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது. இந்தநிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் வெளியேறின.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது” என்றார். ரஷ்ய படைகள் வெளியேறியதையடுத்து கெர்சன் நகருக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்தது. மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர்.
உக்ரைன் இராணுவத்தினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். உக்ரைன் விவகாரத்தில் ரஷியா- அமெரிக்கா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனின் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்பட 200 பேர் ரஷியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது