Home Archive by category

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பிரித்தானிய உறுப்பினர்கள் கோரிக்கை

ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேக்னிட்ஸ்க் பாணியில் பொருளாதாரத் தடைகளை விதித்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழு விவாதத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும். ஜி.எஸ்.பி. பிளஸ் பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இராணுவத்திற்கான அதிகப்படியான செலவினங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரராக உள்ள பிரித்தானியா, தமிழர்களுக்காக, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய நிதியுதவிக்கு நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுடன் இணங்கி 30/1 தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Related Posts