Home Archive by category

சுடப்பட்ட இடத்திலிருந்து பேரணியை மீண்டும் தொடங்கிய இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான சவுக்கத் கானும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், "நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து வரும் செவ்வாய்கிழமை அன்று மீண்டும் பேரணி தொடரும்" என்று இம்ரான் கான் கூறினார்.இதனிடையே, செவ்வாய்கிழமை முதல் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான் கான் கட்சியினரின் பேரணி ஒத்திவைக்கப்பட்டது. வியாழக்கிழமை(இன்று) முதல் மீண்டும் பேரணி தொடரும் என்று இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் கூறினர்.

அதன்படி, பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் இன்று மீண்டும் தொடங்கிய பேரணிக்கு முன்னாள் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி தலைமை தாங்கினார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு பேரணியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Posts