Home Archive by category

ஒரே நேரத்தில் 9 தொகுதிகளில் போட்டி; இடைத் தேர்தலில் இம்ரான்கானின் அதிரடி

பாகிஸ்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போட்டியிடுகிறார்.ஒருவர் ஒரே நேரத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுவது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரிக்-இ-,இன்சாப் கட்சியின் கூட்டணி அரசு கவிழ்ந்து  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.

தமது ஆட்சி கவிழ்க்கப்பட்டது வெளிநாட்டு சதி என பாகிஸ்தான் தெரிக்-இ-,இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் குற்றம்சாட்டினார். அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகிய சில தினங்களில் பாகிஸ்தான் தெரிக்-இ-,இன்சாப் கட்சியைச் சேர்ந்த 123 எம்.பி.க்களும் ராஜினாமா செய்தனர்.ஆனால் அதில் 11 பேரின் ராஜினாமாவை மட்டுமே பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்றார்.இதில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25 ஆம் திகதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அந்த 9 தொகுதிகளிலும் பாகிஸ்தான் தெரிக்-இ-,இன்சாப் கட்சியின் சார்பில் தானோ போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை அறிவித்துள்ளது. ஒருவர் ஒரே நேரத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

பாகிஸ்தான் அரசியல் சாசன சட்டத்தில் ஒருவர் இத்தனை தொகுகளில்தான் போட்டியிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை. இதனைப் பயன்படுத்தி 9 தொகுதிகளில் போட்டியிட இம்ரான்கான் முடிவு செய்துள்ளார். 9 தொகுதிகளிலும் இம்ரான்கான் வெற்றிபெற்றுவிட்டால் அதில் ஒன்றை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற 8 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது அந்த 8 தொகுதிகளிலும் அடுத்த 2 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதையே இம்ரான்கானின் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் 9 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகவும், மக்களிடையே தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும்விதமாகவும் இம்ரான்கான் 9 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை அறிவிக்காவிட்டால் இஸ்லமாபாத்தில் பிரம்மாண்ட பேரணியை நடத்துவோம் என்றும் பாகிஸ்தான் தெரிக்-இ-,இன்சாப் கட்சி எச்சரித்துள்ளது.

Related Posts