Home Archive by category

பிலிப்பைன்ஸ் அருகில் மூழ்கும் இலங்கை அகதிகள் கப்பல்; தொலைபேசி துண்டிப்பு ட்விட்டர் மூலம் இறுதித் தகவல்

306 இலங்கையர்களுடன் கனடா நோக்கிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் மூழ்கும் இலங்கை அகதிகள் கப்பல் தொலைபேசி துண்டிப்பு ட்விடர் மூலம் இறுதித் தகவல் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது

306 இலங்கையர்களுடன் சட்ட விரோதமாக கனடாவுக்கு பயணமான கப்பல் பிலிப்பைன்ஸ் – வியட்னாம் இடையிலான கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த கப்பலில் சுமார் 30 குழந்தைகள் வரையில் உள்ளதாகவும், கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தம்மை காப்பாற்றுமாறு கப்பலில் உள்ள ஒருவருடைய தொலைபேசி ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டடுள்ளதாகவும் சமூகவலைதளமான ட்விட்டரில் தம்மை காப்பாற்றுமாறு பதிவு மற்றும் குரல் பதிவுகளும் வெளியாகியுள்ள நிலையில்

இந்த விடயம் தொடர்பாக இலங்கை கடற்படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பிலிப்பைன்ஸ் கடற்படைக்கும் தகவல்கள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன்,

பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

.30 சிறுவர்கள் உட்பட 306 இலங்கை தமிழர்களுடன் பிலிப்பைன்சிற்கு அருகில் படகொன்று மூழ்கிக்கொண்டிருப்பதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிபிசியின் முன்னாள் பிரான்சிஸ் ஹரிசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
306 பேருடன் கனடா நோக்கி சென்ற சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி சென்ற படகு வியாட்நாமுக்கும் பிலிப்பைன்ஸ் இடையிலான இந்தோ பசுபிக் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Related Posts