Home Archive by category

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆபத்தாகும் குரங்கம்மை

குரங்கம்மை நோய் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களில் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதக் ஊடாக குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 99 சதவீதமானவர்களில் ஆண்கள் எனவும் அவர்களில் 95 சதவீதமானோர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர்  அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts