Home Archive by category

ஆஸி.க்கு மரண பயம் காட்டிய ஆப்கானிஸ்தான்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று அவுஸ்ரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில்  வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணி வீரர்கள் அதிரடியால் ஓட்டம்  200-க்கு மேல் வரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் துல்லியமான் பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை  எடுத்தது. அதிகப்பட்சமாக மெக்ஸ்வெல் அரை சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

169 ஓட்டம்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இதையும் படியுங்கள்: டி 20 உலக கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஜோஷ் லிட்டில் சாதனை தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் – கானி ஆடினர். கானி தொடக்க முதலே தடுமாறினார். அவர் 7 பந்துகளில் 2 ஓட்டம்  எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த இப்ராஹிம் பொறுமையாக விளையாடினார். ஒருபக்கம் அதிரடி காட்டிய குர்பாஷ் 17 பந்தில் 30 ஓட்டம்  எடுத்தார்.

அதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும். இதனையடுத்து இப்ராஹிம் – குல்பாடின் நைப் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சதவிதத்தில் ஆப்கானிஸ்தான் 66 சதவிதமும் அவுஸ்ரேலியா 34 சதவிதமும் இருந்தது. இந்நிலையில் 13-வது ஓவரை ஆடம் சம்பா வீசினார். முதல் பந்தில் 2 ஓட்டம்  எடுக்க முயற்சித்த போது குல்பாடின் நைப் ஆட்டம் இழந்தார் . 2-வது பந்தில் இப்ராஹிம் 26  4-வது பந்தில் நஜிப்புல்லா 0  ஆட்டமிழந்தனர்.

அடுத்த ஓவரில் நபி 1 ஓட்டம் பெற்று  ஆட்டம் இழந்தார் .   எடுத்த அவுஸ்ரேலிய அணி  இதனால் ஆட்டம் அவுஸ்ரேலிய  பக்கம் திரும்பியது. 14.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 103 ஓட்டம் பெற்று  6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்ததாக ரஷித்கான் -ரசூல் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டம்  சேர்த்தனர்.

குறிப்பாக ரஷித் கான் 3 சிக்சர்களை விளாசினார். கடைசி ஓவரில் 22 ஓட்டம்  தேவைப்பட்டது. ரஷித் கானின் அதிரடியில் கடைசி 2 பந்தில் ஆப்கானிஸ்தானுக்கு 11 ஓட்டம்  தேவைப்பட்டது. 5-வது பந்தில் 2 ஓட்டம்  கடைசி பந்தில் பவுண்டரியும் எடுக்கப்பட்டது.

இதனால் அவுஸ்ரேலிய  அணி 4 ஓட்டம்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை வெற்றிக்கு போராடிய ரஷித் கான் 23 பந்தில் 48 ஓட்டம் பெற்று  கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவுஸ்ரேலிய  தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் 

Related Posts