Home Archive by category

"பொதுமன்னிப்பில் விடுதலையான அரசியல் கைதிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும்"

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில்,தண்டனைக்கு அப்பால் அவர்களை நீண்ட காலம் தடுத்து வைத்தமைக்காக இழப்பீடுகளை செலுத்தவேண்டியிருக்கும் என்று தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சந்தேகநபர்கள் என்ற வகையில் 8 பேருக்கு அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதில் மூன்று பேர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.

எனினும் விடுவிக்கப்பட்ட எட்டு கைதிகளில் நான்கு பேர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை விட நீண்ட கால சிறைத்தண்டனைக்கு உட்பட்டவர்கள் என்று ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மூன்று கைதிகள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 

05 வருட சிறைத்தண்டனைக்காக 14 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இருவர் இதில் அடங்குகின்றனர்.

இது சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளின் அடிப்படையில் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகவும் அவர்களை நீண்ட காலமாக இவ்வாறு சிறையில் அடைத்தவர்கள் சகிக்க முடியாத அதிகார துஷ்பிரயோகம் எனவும் சபை மேலும் வலியுறுத்துகிறது.


எனவே இந்தக் கைதிகளை சிறையில் அடைத்ததன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வருடங்கள் இழக்க நேரிட்டது என்பதைக் கருத்தில் கொண்டு இழப்பீடுகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

Related Posts