Home Archive by category

லண்டனில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்படும் இலங்கை அகதிகள்

லண்டனில் st diego gracia தீவில் இருந்து இலங்கை அகதிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கண்டனம் எழுந்துள்ளது. 

st diego gracia தீவில் இலங்கை அகதிகளுக்கான விடயங்களை கையாளும் சட்டத்தரணி Geeth Kulasegaram, மார்னிங் ஸ்டார் ஊடகத்திற்கு தெரிவித்து இருந்த தகவல் படி இவ்வாறு அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு எந்த ஒரு சட்ட ஏற்பாடும் இல்லை. அவ்வாறு செய்வது சட்ட முரணானது என கூறியுள்ளார். 

மேலும் இங்குள்ள அனேகமான அகதிகள் புகலிடம் கோருவதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்கள். அவர்களது காரணங்களும் சரியானதாக இருக்கின்றன என அவர் மேலும் விளக்கி உள்ளார். 

அகதிகளிற்கான 1951ஆம் ஆண்டு சமவாயத்திற்கு இணங்க இந்த நடைமுறைகள் விதிமீறல்கள் என கூறப்படுகிறது. பிரித்தானியாவின் இந்து சமுத்திர பிராந்திய அமைப்பு கடந்த வாரம் அகதிகளை இங்கிலாந்திற்குள் அனுமதிப்பதில்லை, ஒருவேளை அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்,  வேறு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது பிரித்தானியாவின் வளமை எனும் அடிப்படையில் இவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்துள்ளது. அந்த வகையில் இவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 

Related Posts