Home Archive by category

ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து ஜனாதிபதிக்கு கிடைத்த செய்தி

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு உடனடியான மற்றும் நீண்டகால உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களில் இருந்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழல் உருவாக்குவது மற்றும் ஸ்திரத்தன்மை கட்டியெழுப்புவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு தீர்க்கமான சவாலாக  இருக்கும் எனவும் ஐ.நா செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

மேலும் சவால்களை எதிர்கொள்ள தேசிய வழிமுறையை உருவாக்கும் போது, சில அரசியல் கட்சிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த ஜனாதிபதி காட்டி வரும் அர்ப்பணிப்புகளை செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனை மேற்கொள்ளும் போது பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவது மாத்திரமின்றி சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மதிப்பது உட்பட அனைத்து தரப்பினருடனுமான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது முக்கியம் எனவும் அன்டோனியோ குட்டரெஸ், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். 

ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு
நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும்.

இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை ஐ.நா பொதுச்செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், பொதுமக்களுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைவருடனான ஒருமித்த கலந்துரையாடல்களை அவர் வரவேற்றுள்ளார்.

மேலும், பெண்களின் அரசியல் பங்கேற்புக்கான இலங்கையின் முயற்சிகளை அங்கீகரிப்பதிலும், முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் தலைமைத்துவத்தை அவர் பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்களுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானம், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பைத் தொடர்ந்து எதிர்பார்க்கின்றது எனவும் அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts