Home Archive by category

பலமான துடுப்பாட்டம் காரணமாக வெற்றி விளிம்பில் இலங்கை அணி!

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ஓட்டம் பெற்று சகல விக்கெட்டுகளை யும் இழந்தது. அரை சதமடித்த சண்டிமால் 76 ஓட்டம் பெற்று ஆட்டம் இழந்தார் . பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது தலைவர் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 119 ஓட்டம் பெற்று ஆட்டம் இழந்தார்.

இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 4 ஓட்டம் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 329 ஓட்டம் எடுத்து இருந்தது. இந்நிலையில், 4ஆவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இலங்கை அணி மேலும் 8 ஓட்டம் சேர்த்த நிலையில் 337 ஓட்டம் குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சண்டிமால் 94 ஓட்டம் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டும், யாசீர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 342 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் – இமாம் உல் ஹக் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

இமாம் உல் ஹக் 35 ஓட்டம் , அசார் அலி 6 ஓட்டம் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து இறங்கிய பாபர் அசாம் அரை சதமடித்து 55 ஓட்டம் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபிக் சதமடித்து அசத்தினார். இறுதியில், நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 222 ஓட்டம் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபிக் 112 ஓட்டம் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதி நாளான இன்று வெற்றிக்கு 120 ஓட்டம் மட்டுமே தேவைப்படும் நிலையில் பாகிஸ்தான் கைவசம் 7 விக்கெட்கள் மீதம் உள்ளதால் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

 

Related Posts