Home Archive by category

அமெரிக்க சபாநாயகருக்கு எதிராக பொருளாதார தடை…சீனாவிற்கு அமெரிக்கா கண்டனம்…

தைவானுக்கு சென்றதற்காக அமெரிக்க  நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

தைவான் தங்களை தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில், அந்நாட்டை தங்களின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தைவானுக்கு செல்ல வேண்டாம் என நான்சி பெலோசியை  சீனா பல முறை எச்சரித்த நிலைஅமெரிக்க சபாநாயகருக்கு எதிராக பொருளாதார தடை…சீனாவிற்கு அமெரிக்கா கண்டனம்…யில் அதனை பொருட்படுத்தாமல் அவர் அந்த பயணத்தை தொடர்ந்தார். இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டு பேசிய சீன  வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, நான்சி பெலோசியின் தைவான் பயணம், தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தீவிரமாக தலையிடுவது போன்றது எனக் கூறினார். சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையிலும் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தலையிட்டிருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே  தைவான் விவகாரத்தில் சீனாவின் அத்துமீறலான நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவிற்கான சீன தூதர் கின் காங்கை வெள்ளை மாளிகைக்கு அழைத்து சீனாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

Related Posts