Home Archive by category

தராவிட்டால் விடைத்தாள்கள் திருத்தப்படமாட்டாது; ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

நிலுவைத் தொகை செலுத்தப்படாவிட்டால் விடைத்தாள்கள் பார்க்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களம் தற்போது கோரியுள்ளது.விண்ணப் முடிவுத் திகதி இம்மாதம் 21ஆம் திகதி ஆகும்.

விடைத்தாள் மதிப்பீட்டிற்காக செலுத்த வேண்டிய பதினைந்து மில்லியன் ரூபா பணம் இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படாவிட்டால், இந்த வருட உயர்தர விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட கடமைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த பரீட்சைகளில் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் அதிபர்களும் ஆசிரியர்களும் பெரும் தியாகங்களைச் செய்ததாகவும், தமது சொந்தச் செலவில் அச்செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிலுவையிலுள்ள கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் பரீட்சைகள் நிச்சயமற்றதாக அமையும் .அத்துடன் பரீட்சைகள் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் நிலைமை தவிர்க்க முடியாதது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts