Home Archive by category

பொலிஸார் இழுத்துச் சென்றதில் குழந்தை வைத்தியசாலையில் அனுமதி

போராட்டத்தில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் நேற்று  (09) அமைதியாக நினைவுக்கூர போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.

எனினும், இதன்போது போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததால், காலிமுகத்திடலுக்கு தங்களது பிள்ளைகளுடன் வந்திருந்தவர்களையும் பொலிஸார் பிள்ளைகளுடன் இழுத்துச் சென்றிருந்தனர்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவயது குழந்தையொன்று லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நேற்று (09)​ அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு எந்தவிதமானப் பாதிப்புகளும் இல்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிப்பதோடு, சிகிச்சைகள் நிறைவடைந்துள்ளதாகவும் குழந்தை நலமாக இருப்பதால் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொலிஸார் இழுத்துச் சென்றதில் குழந்தையின் பின்புறத்தில் அடிப்பட்டு நீலநிறமாகியிருப்பதாக குழந்தையின் தாய் தெரிவிக்கிறார். இதனால், வைத்தியசாலையில் 24 மணித்தியாலங்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும், “எனது குழந்தைக்கு ஏற்பட்ட இச்சம்பவம் இலங்கையில் இனி வேறெந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. எனவே பொலிஸாரின் இந்த மோசமான செயலுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடுவேன்.” எனவும் குழந்தையின் தாய் தமிழ்மிரருக்குக் கூறினார்.

Related Posts