Home Archive by category

சீன ஊடுருவல்; இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள தகவல்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்த உதவி அமையும் என இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மாநாட்டில் இன்று இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே ஜெய்சங்கர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரும் என்ற நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல்களை தவிர்க்கும் இராஜதந்திர பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.

முன்னதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனையும் சந்தித்தார்.

இதன்போது இலங்கை நெருக்கடியை சந்தித்துள்ள போதும், ஜனநாயக ரீதியில் அனைத்து தரப்பினைரையும் இணைத்து அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts