Home Archive by category

நாட்டைவிட்டு திடீரென வெளியேறிய பசில்

நாட்டின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் வெளிநாட்டு சென்றுள்ளார். அவர் மீண்டு நாட்டுக்கு வருவார் என்பது சந்தேகமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்புககூறவேண்டும் என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் வெளிவந்த பின்னர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் நாட்டில் இருந்து சென்றுள்ளார். இவர் மீண்டும் திரும்பி வருவாரா என்பது சந்தேகமாகும். 

ஏனெனில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் அத்துடன் அப்போது இருந்த அமைச்சரவை மற்றும் சில அரச அதிகாரிகளுக்கு எதிராகவாகும்.

அத்துடன் ஜெனிவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் எமது பொருளாதாரத்தில் அரச, அரச அதிகாரிகளின் ஊழல் மோசடி தொடர்பாக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுககப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு என தெரிவிப்பது, ஆட்சியாளர்களாகும். இவர்களின் பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்கள் காரணமாக மக்களின் மனித உரிமை மீறப்பட்டிருக்கின்றது. அதனால்தான் மனித உரிமை பேரவை இந்த பிரேைணையை காெண்டுவந்திருக்கின்றது.

அத்துடன் ஜெனிவாவில் கடந்த காலங்களில் எமக்கு ஆதரவளித்த நாடுகளும் இம்முறை வாக்களிப்பில் இருந்து விலகி இருந்துள்ளன. எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமையே காரணமாகும். 

ஜப்பான் ஆதரவளிக்கும் என தெரிவித்தார்கள் ஆனால் ஜப்பானும் ஆதரவளிக்கவில்லை. அதனால் சர்வதேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகை வெற்றிகொள்ளும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Related Posts