Home Archive by category

மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அவுஸ்ரேலிய அணி

அவுஸ்ரேலிய – மேற்கிந்திய தீவு அணி  இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் டி20 போட்டியில் அவுஸ்ரேலிய  அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்றமேற்கிந்திய தீவு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை  எடுத்தது. அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 75 ஓட்டம்  குவித்தார். இதனையடுத்து 179 ஓட்டம்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்மேற்கிந்திய தீவு அணி களமிறங்கியது.

முதல் ஓவரின் 5-வது பந்தில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது வெஸ்ட் இண்டீஸ். அதனையடுத்து சார்லஸ்-கிங் ஜோடி நிதானமாக விளையாடி ஓட்டம்  சேர்த்தனர். 23 ஓட்டம்  எடுத்திருந்த நிலையில் கிங் ஸ்டெம்பிங் மூலம் வெளியேறினார். அடுத்த ஓவரில் மேற்கிந்திய தீவு  தலைவர்  பூரன்(2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய சார்லஸ் 30 பந்தில் 29 ஓட்டம்  எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார் . அடுத்த வந்த வீரர்கள் ஹோல்டர்(16), பவல்(18), ஹோசைன் (25), சுமித் (4), என விக்கெட்டுகளை பறிக்கொடுக்க 20 ஓவரில் முடிவில் மேற்கிந்திய தீவு  அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை  எடுத்தது. இதனால் அவுஸ்ரேலிய  அணி 31 ஓட்டம்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. அவுஸ்ரேலிய  அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் 75ஓட்டம் குவித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்

Related Posts