Home Archive by category

இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு போதியளவு இல்லை; சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு போதியளவு இல்லாதமை குறித்து பல உலக நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் மாற்றத்தையும், பொறுப்புக்கூறலையும் கோரும் இலங்கையர்களிற்கு ஆதரவளிப்பதென்றால் இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழான ஏனைய குற்றங்கள் குறித்த ஆதாரங்ளை சேகரித்து ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் திட்டத்தை நீடிப்பதற்கான ஆணையை கோருகின்றது.

 அதேவேளை, இலங்கையின் பொருளாதார சமூக நெருக்கடியை தொடர்ந்தும் காண்காணிக்க வேண்டும் எனவும் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எனினும் இலங்கை தான் மனித உரிமைகளை பாதுகாப்பதாக தெரிவித்து இதனை எதிர்க்கின்றது. இலங்கை பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பற்றாக்குறைகளிற்கு தீர்வை காண்பதற்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்த இந்தியா, இலங்கையின் மனித உரிமை தொடர்பான விவாதத்தின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு அளவிடக்கூடிய முன்னேற்றம் இல்லை என தெரிவித்திருந்தது எனவும் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

Related Posts