Home Archive by category

ஜனாதிபதி -சுதந்திரக் கட்சி இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

22ம் திருத்தச்சட்டம், இடைக்கால வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வகட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு

நாடாளுமன்றத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு, பிரிந்து செயற்படுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் வைத்து தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்திருந்தார்.

 அத்துடன், அனைவரையும் இணைந்து செயல்பட அழைக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக நான் கலந்துரையாடல்களை தொடங்கி இருக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியாக செயல்படுவது அல்ல.

அனைவரும் இணைந்து செயல்படுகின்ற ஒரு அரசாங்கம் ஆகும். இதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை நான் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
 

Related Posts