Home Archive by category

மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு!

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கான உபகரணங்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறையே இதற்கான காரணம் என அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

மருந்துகளுக்கான விலையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது சுகாதார அமைச்சினுடைய பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளில் பாரிய பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாதாந்த மருத்துவ சிகிச்சைகளுக்காக வருகை தரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒளடத பற்றாக்குறையானது தற்போது தேசிய வைத்தியசாலைகளில் மாத்திரமின்றி கிராமிய வைத்தியசாலைகளிலும் காணப்படுகின்றது.

இதனால் நோயாளர்கள் ஒளடதங்களின்றி வாழக்கூடிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் எனவும் அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும் அதிக விலையுடைய ஒளடதங்களை இறக்குமதி செய்வதற்கு தனியாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை நடைமுறைக்கு சாத்தியமற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related Posts