Home Archive by category

அமெரிக்காவில் ஏலம் விடப்பட்ட ஹிட்லரின் கடிகாரம்

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் பயன்படுத்திய கைக்கடிகாரம் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஏல விற்பனையில் 1.1 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த கைக்கரகாரத்தில் AH என்ற இரண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்வாஸ்திக் மற்றும் நாசி கழுகு என்பனவும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கடிக்காரம் 1933 ஆம் ஆண்டு ஹிட்லருக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஏல விற்பனையை யூதர்கள் கண்டித்துள்ளனர். 34 யூத தலைவர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை மேரிலேண்ட் ஏல விற்பனை நிறுவனமான அலெக்ஸ்சாண்டர் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதுடன் கடிக்காரத்தை விற்பனை செய்ய வேண்டாம் என கோரியுள்ளனர்.

எனினும் வரலாற்றை பாதுகாப்பது தமது நோக்கம் என ஏல விற்பனை நிறுவனம் ஜேர்மனிய ஊடகங்களிடம் கூறியுள்ளது.

அடோல்ப் ஹிட்லர் 1933 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை ஜேர்மனியை ஆட்சி செய்ததுடன் 6 மில்லியன் யூதர்களை படுகொலை செய்த தலைவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார். 

Related Posts