Home Archive by category

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை நாளை

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (03 ) காலை10.30 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்போது நாடாளுமன்றத்தில் நாளை ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மாத்திரமே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான அழைப்பை  வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி, எதிர்கால திட்டங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கடிதம் மூலம் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் 2290/35 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக கடந்த ஜூலை 28 ஆம் திகதி ஜனாதிபதியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல் தொடர்பான நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரம் மற்றும் அது தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென்றும் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.  

Related Posts