Home Archive by category

உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ தளவாடங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ தளவாடங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியதாக அறிவித்தது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து 6 மாதங்களை கடந்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மற்றும் உலகின் 10 பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்று உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையம். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது தொடர்ந்து  இந்த அணுமின்நிலையம் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான யூரோக்களை சேர்த்து, ராணுவ செலவினங்களுக்காக கூடுதலாக பணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக முகாமின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஏஇஏ இயக்குநர் ரபேல் மேரியனோ குறோசி கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனில் இருக்கும் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்ந்நிலை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மேலும் நாங்கள் இந்த சூழ்நிலையை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க முடியாது. ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தில் தாக்குதல் நடத்துவது என்பது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். உக்ரைனில் உள்ள கடைசி அணுஉலை மூடப்பட்டு, பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் போர் நடைபெறும் பகுதியின் நடுவில் அமைந்துள்ள ஆலையின் பாதுகாப்பு நிலைமை ஆபத்தானதாகவே உள்ளது என்றும் கூறியுள்ளது.

சமீபத்திய நாட்களில், உக்ரேனியப் படைகள் அதிநவீன மேற்கத்திய ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ரஷ்ய படைகளை நாட்டின் கிழக்குப் பகுதியில் அவசரமாக பின்வாங்கச் செய்தன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் கூடுதலாக ஒன்பது பில்லியன் யூரோக்களை இராணுவம் அல்லாத நிதியுதவியாக உக்ரைனுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அதில் ஒரு பில்லியன் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது, மற்றொரு ஐந்து பில்லியன் யூரோக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள மூன்று பில்லியன் யூரோக்கள் உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப் பொறுத்தது என்று கூறினார்.

Related Posts