Home Archive by category

இலங்கையில் புற்று நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் உட்பட 60 க்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பி திலகரத்ன தெரிவித்துள்ளார்.

புற்று நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், என பல நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பற்றாக்குறையினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக அஜித் பி திலகரத்ன தெரிவித்தார்.

கொழும்பு சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகத் திணைக்களத்தில் தற்போது மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் மற்றுமொரு மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அஜித் பி திலகரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் பற்றாக்குறையினால் அந்த நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பற்றாக்குறையாக உள்ள சில மருந்துகள் அதிக விலை கொண்டவை அல்ல, ஆனால் அந்த மருந்துகளை வாங்கவோ அல்லது இறக்குமதி செய்யவோ முறையான வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு தயாரிக்காததால் மருத்துவமனை அமைப்புகள் சரிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக திலகரத்ன மேலும் தெரிவித்தார்.

Related Posts