Home Archive by category

ஐரோப்பிய நாடுகளிடம் ஆயுதங்கள் இல்லை! மகிழ்ச்சியில் புடின்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யவிற்கிடையிலான போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் தொடச்சியாக ஆயுத தளபாடங்களை வழங்கி வருவதால் தற்போது ஐரோப்பிய நாடுகளிடம் இருப்பில் இருந்த ஆயுதங்கள் வெகுவாக குறைந்து விட்டதாகவும் பல ஐரோப்பிய நாடுகள் தற்போது ஆயுத பற்றாக்குறையினால் அச்சங் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து ரஷ்ய அதிபர் புடின் கருத்து
தெரிவிக்கும் போது,

ரஷ்யா என்னும் ஒரு தனி நாட்டிற்கெதிராக அனைத்து ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்களும் பாவிக்கப்பட்டு தற்போது உக்ரைன் உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஆயுத பற்றாக்குறையில் காணப்படுகின்றன.

இந்த நிலைமையை பார்க்கின்ற போது எம்மிடம் இருக்கின்ற ஆயுதங்களை வைத்து முழு ஐரோப்பிய நாடுகளையும் எம்மால் தற்போதைய சூழலில் கைவசப்படுத்த முடியும் என்ற எண்ணம் வருவதாகவும் ஐரோப்பிய நாடுகளின் இந்த நிலையை யோசிக்கும் போது எமக்கு சிரிப்புத்தான் வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல்  கருத்து தெரிவிக்கும் போது, 

ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு சுமார் 500 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வது குறித்த கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருதாக தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts