Home Archive by category

உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதரிகரிப்பு காரணமாக சிற்றுணவகங்களில் சிற்றுணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றுணவக உரிமையாளர்களே, தமது உற்பத்திகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முட்டை ரொட்டி, பரோட்டா, மரக்கறி ரொட்டி மற்றும் ரோல்ஸ் உள்ளிட்ட சிற்றுணவுகளின் விலைகள் 10 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தற்போது சிற்றுணவகங்களில், அரை இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 250 ரூபா என்ற அளவிலும், கால் இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 180 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நுகர்வோரை பாதுகாப்பதற்காக தாங்கள் விலைகளை தீர்மானித்த போதிலும், தற்போது சிற்றுணவக உரிமையாளர்களே விலைகளை அதிகரித்துள்ளனர்

கருப்புச்சந்தை வர்த்தகர்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நுகர்வோரே பாதிக்கப்படுகின்றனர்.

600 ரூபாவாக்கு விற்பனை செய்யப்பட்ட கொத்து ரொட்டி, நேற்றிரவு முதல் 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மரக்கறி ரொட்டி, இன்று 120 ரூபாவுக்கு விற்பனை செய்யபடுவதாக அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்

Related Posts