Home Archive by category

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு; காலியாக உள்ள 10 நகரங்கள்

கனடாவில் ஏராளமான கனேடியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில், அதிக புலம்பெயர்வோரை வரவேற்றே ஆகவேண்டிய ஒரு நிலையில் அந்நாடு உள்ளது.

அதை ஊர்ஜிதம் செய்வாற்போல், கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraserம், நமது சமுதாயங்களுக்கு உதவும் வகையில், நாம் தொடர்ந்து வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்வோரை வரவேற்க இருக்கிறோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கனடாவில் எந்த 10 நகரங்களில் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் பணியிடங்கள் காலியாக உள்ளன?  

பிரான்ட்போர்ட் (Brantford), Ottawa, கெலோனா (Kelowna). கியூபெக், கால்கரி, சாஸ்கட்டூன், அபார்ட்ஸ்போர்ட், ஹாலிஃபாக்ஸ், விக்டோரியா மற்றும் ரொரன்றோ ஆகிய நகரங்களில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன.

எந்தெந்த திட்டங்களின் கீழ் பணிகளைப் பெறலாம்?

பெடரல் திறன்மிகுப் பணியாளர்கள் திட்டம் (Federal Skilled Worker - FSW), பெடரல் திறன்மிகு வர்த்தக திட்டம் (Federal Skilled Trades - FST) மற்றும் கனடா அனுபவ வகுப்பு (Canada Experience Class - CEC) ஆகிய மூன்று திட்டங்களும்தான் கனடாவில் பொருளாதாரப் புலம்பெயர்வோர் பணிக்கு விண்ணப்பிக்கப் பொருத்தமான திட்டங்கள் ஆகும்.

இவை அனைத்துமே எக்ஸ்பிரஸ் நுழைவைத்தான் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எந்தெந்த துறைகளில் பணிகள் அதிக அளவில் காலியாக உள்ளன?

தொழில்துறை (industrial, எலக்ட்ரிக்கல் மற்றும் கட்டுமானத்துறைகள், பராமரிப்பு மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டு வர்த்தகம், இயற்கை வளங்களில் தொழில்நுட்பப் பணிகள், விவசாயம் மற்றும் அது தொடர்பான உற்பத்தி, பதப்படுத்தல், தயாரிப்பு மற்றும் பயன்பாட்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆபரேட்டர்கள் ஆகிய பணிகள் அதிகம் காலியாக உள்ளன.

மேலும் உணவுக்கலை நிபுணர்கள், சமையல்காரர்கள் மற்றும் கேக் தயாரிப்போர் முதலான பணியிடங்களும் காலியாக உள்ளன.  

Related Posts