Home Archive by category

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்; ஜனாதிபதி கவலை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர் மாதத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நிதியுதவி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் நகரவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு உடன்படிக்கையை எட்ட இலக்கு வைத்திருந்தாலும், தற்போது அது ஒரு மாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துவதாக இலங்கை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இலங்கை 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும், இதில் 28 பில்லியன் டொலர்கள் 2027 க்குள் செலுத்தப்பட வேண்டும்.

நாணய நெருக்கடி காரணமாக எரிபொருள், மருந்து மற்றும் சமையல் எரிவாயு போன்ற பல முக்கியமான இறக்குமதி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts