Home Archive by category

அமெரிக்காவுக்கு சீனா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா - சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. குறிப்பாக தாய்வான் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

தாய்வான் தன்னை சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ தாய்வான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. அதுமட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது எனவும் சீனா மிரட்டி வருகிறது.

இதனால் சீனா - தாய்வான் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில், தாய்வானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்து வருகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

இந்தச் சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா, நான்சி பெலோசி தாய்வானுக்கு சென்றால் அதற்குரிய விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தது.
தாய்வான் விவகாரத்தில் தலையிட வேண்டாம்

இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் தொலைபேசியில் பேசினர். நேற்று முன்தினம் நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

அப்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். அதோடு வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டின்போது இருவரும் நேரில் சந்தித்து பேசுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் தாய்வான் விவகாரம் முக்கியத்துவம் பெற்றதாகவும், தாய்வான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என ஜோ பைடனை ஜின்பிங் பகிரங்கமாக எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Posts