Home Archive by category

காலிஸ்தானை உருவாக்க கனடாவில் சீக்கிய அமைப்பு நடத்திய பொது வாக்கெடுப்பு

பிரிவினைவாத அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ)அமைப்பு கனடாவில் இந்தியாவைப் பிரித்து, சீக்கியர்களுக்கான காலிஸ்தான் நாட்டை உருவாக்குவது தொடர்பான பொது வாக்கெடுப்பை நடத்தியுள்ளது.

SFJ நிறுவனர் குருபத்வந்த் சிங் பண்ணு தலைமையில் சர்ரேயில் உள்ள குருத்துவாராவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

வச்சனா குர்பத்வந்த் பலத்த தனிப்பட்ட பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெடுப்பு நடந்த இடத்தில் இந்தியாவுக்கு எதிரான உரையை நிகழ்த்தியுள்ளார்.

குருநானக் சிங் குருத்வாராவில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வாக்கெடுப்பில் 50 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்துக்கொள்ளலாம் என சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு எதிர்பார்த்திருந்தது.

காலிஸ்தான் பிரிவினைவாதம் உட்பட பல இருதரப்பு விவகாரங்கள் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த நிலையில், கடந்த ​​ஞாயிற்றுக்கிழமை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

கனடாவில் இந்திய விரோத சக்திகள் நாசத்தை உருவாக்கி விட்டதாக பிரதமர் ட்ரூடோவிடம் இந்திய பிரதமர் மோடி கவலை வெளியிட்டிருந்தார்.

Related Posts