சச்சித்திர சேனநாயக்கவிற்கு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்க வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் இயக்குநர் சச்சித்திரசேனநாயக்க வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மூன்றுமாதகாலத்திற்கு இந்த தடை நடைமுறையிலிருக்கும்.
2020 எல்பிஎல் போட்டிகளில் இடம்பெற்ற ஆட்டநிர்ணய சதி தொடர்பில் முன்னாள் வீரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆட்டநிர்ணய சதி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.