Home Archive by category

அமெரிக்க ஜனாதிபதியை முகநூலில் அச்சுறுத்திய நபர் சுட்டுக்கொலை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஏனைய அதிகாரிகளை இணையத்தளம் வழியாக அச்சுறுத்திய நபரை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் நேற்று சுட்டுக்கொன்றுள்ளனர்.

Craig Robertson என்ற இந்த நபரின் வீட்டுக்கு சென்ற எப்.பி.ஐ. பொலிஸார், அவரை கைது செய்வதற்கான பிடியாணை வழங்க முயற்சித்த போது இந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் பராவோ தென் பகுதியில் உள்ள லேக் சிட்டியில் நடந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்துள்ள Craig Robertson தனது முகநூல் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளை மிரட்டி பதிவுகளை இட்டுள்ளார்.

துப்பாக்கி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, ஜனாதிபதி பைடன், டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான விசாரணைகளை நடத்தி வரும் அதிகாரிகளை Craig Robertson அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை இட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க சட்டமா அதிபர் Merrick Garland மற்றும் நியூயோர்க் மாநில சட்டமா அதிபர் Letitia James எப்.பி.ஐயில் முறைப்பாடு செய்திருந்தனர்.

ஜனாதிபதி பைடன் உட்டா என்ற பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்ய உள்ள நிலையில், அங்கு வைத்து அவரை கொலை செய்யும் வகையிலான பதிவுகளை இந்த நபர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

Related Posts