Home Archive by category

எனது நோக்குநிலை எப்போதும் நேர்மையாதாக இருக்கும் : சிங்கப்பூர் ஜனாதிபதி வேட்பாளர் தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூரின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம், புதிய சகாப்தத்துக்கான ஜனாதிபதியாக தான் விளங்கப்போவதாகவும் சிங்கப்பூர் கலசாரத்தை உலகின் பிரகாசிக்கும் ஸ்தானமாக பரிமணிக்கச் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற பிரபல பொருளாதார நிபுணரான தர்மன் சண்முகரத்தினம் (66) சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் மற்றும் சமூக கொள்கைகள் அமைச்சரர் மற்றும் மத்திய வங்கித் தலைவர் உட்பட பல பதவி விகித்து வந்த தர்மன் சண்முகரத்தினம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்பதவிகளிலிருந்தும் ஆளும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் (PAP) கடந்த மாதம் விலகினார்.

சிங்கப்பூரின் ஜனாதிபதி பதவி அரச சார்பற்றது என்பதால், ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுபவர் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என்பதே இந்த விலகலுக்குக் காரணம்.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக தன்னை முன்மொழிபவரையும் வழிமொழிபவரையும் அறிமுகப்படுத்துவதற்கான செய்தியாளர் மாநாட்டை கடந்த புதன்கிழமை தர்மன் சண்முகரத்தினம் நடத்தினார்.

'ஒருவருக்கொருவர் மரியாதை' என்ற தொனிப்பொருளில் இச்செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் கலாசாரத்தை பரிணாமமடையச் செய்ய வேண்டும் நான் உறுதியாக நம்புவதால் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.  

எமது கலாசாரத்திலும் எமது சில வழக்கங்களிலும் ஒருவரோடொருவர் இணைந்து செயற்படும் எமது முறைமையிலும்  மாற்றங்கள் செய்வதன் மூலம் சிங்கப்பூரை உலகின் பிரகாசிக்கும் இடமாக நீடிக்கச் செய்யலாம் என அவர் கூறினார்.  

'சிங்கப்பூர் ஜனாதிபதியாக நான் தெரிவானால், புதியதும் மேலும் சவாலானதுமான சகாப்தத்தில் உங்கள் ஜனாதிபதியாக சேவையாற்றுவதற்கு, தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எனது முழு அனுபவங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன்' என தர்மன் சண்முகரத்தினம் கூறினார்.

தனது  22 வருட கால அரசியல வாழ்க்கையானது  மக்களை ஐக்கியப்படுத்துவதற்கான அனுபவத்தை தனக்கு வழங்கியுள்ளது என அவர் கூறினார்.

'ஐக்கியப்படுத்தும் நபர் எனக் கூறியும்போது, நான் வெறுமனே சொல்லாட்சிக்காகவோ, ஆசைக்காகவோ கூறவில்லை.  மாறாக உண்மையான செயற்பாட்டு வரலாற்றிலிருந்து பேசுகிறேன்.

 வித்தியாசமான நோக்குகள், வித்தியாசமான அரசியல் சார்புகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் பொது இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியனவும் இதில் அடங்கும்.

 நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால்இ தனது அடிப்படை நோக்குநிலையானது நேர்மை ஆனதாக இருக்கும் எனவும்இ தனது ஜனாதிபதி பதவியை அது வரையறை செய்யும் .

ஒரு பச்சோந்தி போன்று எனது நிறத்தை நான் மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. நான் அதே நேர்மையும் அதே சுயாதீன மனதையும் கொண்ட அதே நபர். ஜனாதிபதி பாத்திரத்துக்கு இது முக்கியமானதாகும்' எனவும் அவர் கூறினார்.

'சிங்கப்பூர் மக்கள் மேலும் வித்தியாசமான கருத்துக்களைக் கெர்ணடிருக்கின்றனர். அத்துடன் பிளவுபட்ட சமுதாயமாக மாறுவதைத் தவிர்ப்பதே நாட்டின் உண்மையான சவால்' எனவும் அவர் கூறனார்.

வேட்பாளர்களை அவர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அல்லாமல் அவர்களின் அரசியல் தொடர்பு அடிப்படையில் மதிப்பிடுவது குறித்தும் சண்முகரத்தினம் எச்சரித்தார்.  

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி ஹலீமா யாகோப்பின் பதவிக்காலம் எதிர்வரும் 13 ஆம் திகதி பூர்;த்தியாகவுள்ளது. அதற்குமுன் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.

இத்தேர்தலில்; தொழிலதிபர் ஜோர்ஜ் கோஹ் உட்பட வேறு சிலரும் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகுவதற்கு பல்வேறு தகுதிகளைக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதித் தேர்தல்கள் குழுவின் தகுதிச் சான்றிதழையும் பெற வேண்டும்.

சிங்கப்பூரின் 6 ஆவது ஜனாதிபதியாக தமிழரான எஸ்.ஆர்.நாதன் 1999 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரானது நேர்மையான நிர்வாகத்துக்கு பெயர்பெற்றதாகும்.

அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஊல் குற்றச்சாட்டு தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் டான் சுவான் ஜின், ஆளுங்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்  செங் லி ஹூயியுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டார். அதையடுத்து சபாநாயகர்  டான் சுவான் ஜின்னும், பாராளுமன்ற செங் லி ஹூயியும் அப்பதவிகளிலிருந்து அண்மையில் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts