Home Archive by category

ரஷ்ய பெண் அதிகாரிக்கு தடை விதித்த கனடா

சிறுவர் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய ரஷ்ய பெண் அதிகாரிக்கு கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

மாரியா லோவா பிலோவா (Maria lvova-Belova) பெண் அதிகாரிக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிலோவாவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாகவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இடம்பெற்ற சிறுவர் கடத்தல்களின் பிரதான சூத்திரதாரியாக பிலோவா கருதப்படுகின்றார்.

உக்ரைன் சிறுவர்களை கடத்தி, ரஷ்ய சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் இந்த சிறுவர்களை வளர்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போர் ஆரம்பமான நாள் முதல் ஆயிரக் கணக்கான உக்ரைன் சிறுவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்யா 28000 போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அதில் சிறுவர் கடத்தல்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பிலோவாவிற்கு எதிரான தடை குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Posts