Home Archive by category

குர் ஆன் எரிப்பு: ஐநா மனித உரிமைகள் பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

புனித குர் ஆன் எரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐநா மனித உரிமைகள் பேரவை இன்று வாக்களித்தது.

பாகிஸ்தானும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் இணைந்து இக் கண்டனத் தீர்மானத்தை முன்வைத்திருந்தன.

சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் ஈராக்கிய அகதி ஒருவர் குர் ஆனை தீக்கிரையாக்கிய சம்பவத்தையடுத்து இக்கண்டனத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.  

ஜெனிவாவிலுள்ள ஐநா மனித உரிமைகள் பேவையில் இக்கண்டனத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை நடத்தப்பட்டது. 

இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 28 நாடுகளும் எதிராக  12 நாடுகளும் வாக்களித்தன. 7 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 

சீனா, இந்தியா, கியூபா, தென் ஆபிரிக்கா, உக்ரேன், வியட்நாம் ஆகியனவும் ஆதரவாக வாக்களித்தன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கொஸ்டாரிக்கா, மொன்ட்டேனெக்ரோ முதலான நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 

பெனின், சிலி, மெக்ஸிக்கோ, நேபாளம் முதலான நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

Related Posts