Home Archive by category

ஆபத்தான கிளஸ்டர் வெடிகுண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா

ஆபத்தான "கிளஸ்டர் வெடிகுண்டுகள்" என அழைக்கப்படும் கொத்து குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா வழங்கவுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்,

கொத்து குண்டுகளின் ஆபத்து காரணமாகவே உக்ரைனுக்கு அவற்றை வழங்குவதை இத்தனை மாதங்களாக தாமதப்படுத்தியதாக தெரிவித்தார்.

இருப்பினும் உக்ரைன் நாட்டில் ஆயுதப்பற்றாக்குறை நிலவ அமெரிக்கா ஒரு போதும் விரும்பாது என தெரிவித்தார்.

உக்ரைனுக்கு அனுப்பப்படும் அமெரிக்க கொத்துக் குண்டுகள் ரஷ்யாவால் ஏற்கனவே உக்ரைன் மீதான போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை விட மிகவும் பாதுகாப்பானவை என தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்காவின் இந்த தீர்மானம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொத்துக் குண்டுகள் என்பவை ராக்கெட், ஏவுகணை அல்லது பீரங்கி போன்ற உபகரணங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சிறிய குண்டுகளை சிதறடிக்கும் ஒரு தாக்குதல் முறைமையாகும்.

குறித்த தாக்குதலில் ஒரு பெரிய குண்டின் உள்ளே பல சிறிய குண்டுகளை வைத்து ராக்கெட், ஏவுகணை, பீரங்கி அல்லது விமானத்தில் இருந்து வீசப்படுகின்றது.

Related Posts