Home Archive by category

இனப்படுகொலையால் இலட்சக்கணக்காக உயிர்களை இழந்த இனம் தமினம் மட்டுமே.!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான சுதந்திரம் பறிக்கப்பட்ட 1948, பெப்ரவரி,04, ம் திகதி தொடக்கம் 2009, மே,18, வரை இலட்சக்கணக்கான இனப்படுகொலையை சந்தித்த ஒரே இனம் என்றால்  அது தமிழினம் மட்டுமே.

ஈழவிடுதலைப்போராட்டத்தால் மூன்று இன மக்களும்(தமிழர், சிங்களவர், இஷ்லாமியர்) படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனபது உண்மை ஆனால்  இலட்சக்கணக்கில் உயிர் இழந்தவர்கள் தமிழர்கள்தான்.

இரண்டாவது நிலையில் ஆயிரக்கணக்கில் உயிர் இழந்தவர்கள் சிங்கள மக்கள்தான்,
 மூன்றாம் நிலையில் நூற்றுக்கணக்கில் உயிர் இழந்த முஷ்லிம் மக்கள்தான் இதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

தந்தை செல்வா தொடங்கிய அகிம்சைரீதியலான விடுதலைப்பயணம் 1949,ம் ஆண்டு தொடக்கம் 1977, ம் ஆண்டுவரை நடைபெற்றபோது நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர்.

தமிழ்பேசும் மக்களாக தமிழர்களும், முஷ்லிம்களும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியால் மேற்கொண்ட சத்தியாக்கிரகப்போராட்டம், உண்ணாவிரதக்போராட்டம், கறுப்பு கொடிப்போராட்டம், பேரணிகள், மகாநாடுகள், தமிழ்தபால் போராட்டம், ஶ்ரீ எதிர்ப்பு போராட்டம்,வீதிமறிப்பு போராட்டம், கடையடைப்புப்போராட்டம் என பல விதமான போராட்டங்களில் எல்லாம் தமிழ்தலைவர்களுடன் தமிழ் மக்களுடன், முஷ்லிம் அரசியல் தலைவர்கள் முஷ்லிம் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் ஒன்றாக கலந்து கொண்ட வரலாறுகளை மறுக்கமுடியாது.

அதன்பின்னர் 1976, மே,14,ல் வட்டுக்கோட்டை தீர்மானம் சுதந்திர தமிழீழம் அமைக்கும் பிரேரணை தமிழர் விடுதலை கூட்டணியால் தந்தை செல்வா தலைமையில் நிறைவேற்றியபின்னர் அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டமாக ஆரம்பித்த வேளையில் இளைஞர்கள் 36, விடுதலை இயக்கங்களை ஆரம்பித்தனர் இந்த காலத்திலும் தமிழ் இளைஞர்களுடன் முஷ்லிம் இளைஞர்களும் இணைந்து ஈழவிடுதலைப்போராட்டத்தில் இணைந்து உயிர் நீத்த வரலாறுகளையும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

தமிழ் தேசிய அரசியலுடன் பின்னிப்பிணைந்து பயனித்த முஷ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகி 1981,செப்டம்பர்,21,ம் திகதி முதன் முதலாக காத்தான்குடியில் அஷ்ரப் அவர்கள் முஷ்லிம்களுக்கு தனியான அரசியல் கட்சி தேவை என உணர்ந்து ஶ்ரீ லங்கா முஷ்லிம் காங்கிரஷ் கட்சியை உருவாக்கினார். பின்னர் அந்த கட்சியை உத்தியோகபூர்வமாக 4, வருடங்களின் பின்னர் 1986,நவம்பர்,29,ல் அரசியல் கட்சியாக அங்குராப்பணக்கூட்டம் இடம்பெற்றது.
1988,பெப்ரவரி,11,ல் தான் ஶ்ரீ லங்கா முஷ்லிம் காங்கிரஷ் தேர்தல் திணைக்களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1987, செப்டம்பர்,29, ல் இலங்கை இந்திய ஒப்பத்தம் செய்யும் காலம் வரை பெயரளவிலும், சில கரந்தடிதாக்குதல்களுடனும் செயல்பட்ட 35, விடுதலை இயக்கங்களில் ஓரிரு இயக்கம் அரசியல் நீரோட்டத்தில் அரசியல் கட்சிகளாக செயல்பட்டன ஏனைய பல இயக்கங்கள் தொடர்ந்து செயல்படாமல் தமது இயக்கங்களை கலைத்துவிட்டு ஒதுங்கிவிட்டன.

அந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ரெலோ, புளட், ஈபிஆர்எல்எவ் இயக்கங்களை தடைசெய்து அவர்களுக்கு எதிராக மோதல்களை மேற்கொண்டதையும் காணலாம்.

இருந்த போதும் இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987,ல் செய்யப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகள் தவிர்ந்த வேறு எந்த இயக்கமும் விடுதலைக்காக போராடவல்லை. அதேபோல் 1987, செப்டம்பர்,29, இலங்கை இந்திய ஒப்பந்தம்வரை கரந்தடி தாக்குதல் மட்டும்்நடத்திய்விடுதலைப்புலிகள் இயக்கம்  அதன் பின்னர் மரபுப்படையணியாக மாறியது.மரபுப்படையணியாக வேறு எந்த தமிழ் ஆயுத இயக்கங்களும் செயல்படவில்லை.

 இந்திய அமைதி காக்கும் படையினருடன்தான் முதலாம் கட்ட ஈழப்போரை 1987,அக்டோபர்,10, ம் திகதி தொடக்கம் 1990,மார்ச்,24, வரை மேற்கொண்டனர். இந்தியப்படை அன்றய தினம் இலங்கையை விட்டு வெளியேறியது.
1990,யூன்,10, தொடக்கம் 1994,டிசம்பர்,19, வரையும் விடுதலைப்புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போரை இலங்கை படையுடன் முன்எடுத்தனர்,

1995,ஏப்ரல்,19, தொடக்கம் 1992,பெப்ரவரி,22, ம் திகதி வரை மூன்றாம் கட்ட ஈழப்போரை இலங்கை படையினருடன் மேற்கொண்டனர்,2006, மே மாதம் தொடக்கம் 2009, மே,18, முள்ளிவாய்க்கால் மௌனம் வரை நாலாம் கட்ட ஈழப்போர் விடுதலைப்புலிகளால் மேற்கொண்டாலும் இலங்கை இராணுத்துக்கு துணையாக  பல சர்வதேச நாடுகள் செயல்பட்டன என்பது உண்மை.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையால் இலட்சக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள் அதில் ஏறக்குறைய ஐம்பாதாயிரம் மாவீரர்களும், ஏனய இயக்கங்களை சேர்ந்த போராளிகளும் உயிர் நீத்தனர் என்பது உண்மை.
சிங்கள மக்களும் சிங்கள படையினரும் அடங்கலாக ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டுள்ளனர்.
முஷ்லிம் மக்களை பொறுத்தவை 46, மாவீரர்கள் அடங்கலாக நூற்றுகணக்கானவர்கள் இறந்துள்ளனர் என்பதற்கும் மாற்றுக்கருத்துகள் இல்லை.

இலங்கையில் 1915, ல் முஷ்லிம்களுக்கும் சிங்களவர்களும் இடையில் முதன் முதலாக ஏற்பட்ட இனக்கலவரத்தின்போது தென்பகுதியில் 4075, முஷ்லிம் கடைகள் எரிக்கப்பட்டும்,85, பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டும்,136, முஷ்லிம் மக்கள் படுகொலைசெய்யப்பட்டதும் சிங்களவார்களால் நடந்த மோதலாகும்.

அதன்பின்னர் 1976,ஜனவரியில் புத்தளத்தில் ஏற்பட்ட சிங்கள முஷ்லிம் இனக்கலவரத்தால் 18, முஷ்லிம்கள் பொலிசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்னர், இதன் எதிரொலியாக பொத்துவில் ஒரு பள்ளிவாசல் சிங்களவரால் சேதமாக்கப்பட்டது.
1982,யூலை மாதம் காலியில் ஏற்பட்ட முஷ்லிம் சிங்களவர் மோதலால் கண்டி,மாவனல்ல,கொழும்பு வரை முஷ்லிம்கள் தாக்கப்பட்டனர்.
2002,நவம்பரில் சிலாபம், புத்தளம்,காலி வரை சிங்கள முஷ்லிம் இனமோதல் இடம்பெற்றது இதனால் காலியில் ஒரு முஷ்லிம் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

1983 ம் ஆண்டு காலப்பகுதியில்தான் தமிழ் முஷ்லிம் மக்களை பிரித்தாளும் தந்திரம் சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு விசமத்தனமான பிரசாரங்களை முஷ்லிம்மக்கள் மத்தியில் பரப்பபட்டது.

இதன் வெற்றி1988,டிசம்பர் 18,ல் ஜனாதிபதியாக தெரிவான ஆர்.பிரமதாசாவின் நிறைவேற்று அதிகாரம்   1990 களில் முஷ்லிம் ஊர்காவல் படையை இனரீதியாக கிழக்கில் ஆரம்பித்தார்.
பிட்டும் தேங்காய் பூவும் என ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஷ்லிம் மக்களை முட்டி மோதும் சமூகமாக மாற்றினார் இதன் விளைவு தமிழ் முஷ்லிம்மக்களிடையே குரோத மனப்பாங்கு இன்றுவரை தொடர்கிறது.

1985,க்கு பின்னர் ஏற்பட்ட தமிழ் முஷ்லிம் முரண்பாடு மோதல்களால்..
படுகொலை செய்யப்பட்ட முஷ்லிம் மக்களின் விபரம்
1.1985,ஏப்ரல்,07,ல் மன்னார் பள்ளிவாசலில் 06.பேர்,
2.1990,யூலை,12,ல் குருக்கள்மடம் கிரான்கும் 19, பேர்.
3.1990,ஆகஷ்ட்,03,ல் காத்தான்குடி பள்ளிவாசல் 103, பேர்,
4.1990,ஆகஷ்ட்,05,ல் முள்ளியவ்காடு 17, பேர்,
5.1990,ஆகஷ்ட்,06,ல் அம்பாறை 33, பேர்.
6.1990,ஆகஷ்ட்,11,ல் ஏறாவூர் 121, பேர்,
7.1990,ஆகஷ்ட்,11,ல் அறுகம்பை 09, பேர்,
8.1990,ஆகஷ்ட்,20,ல் வாகனேரி 17,பேர்,
9.1990,ஒக்டோபர்,13,ல் அரந்தலாவ 09, பேர்,
10.1991,மார்ச்,24,ல் அக்கரைப்பற்று 09,பேர்,
11.1991,மே,20,ல் சம்மாந்துறை 09, பேர்,
12.1991, செப்டம்பர்,19,ல் புதூர் 18, பேர்,
13.1991,செப்டம்பர்,19, ல பள்ளித்திடல் 13, பேர்,
14.1992,ஏப்ரல்,29,ல் அழிச்சிப்பொத்தானை 170, பேர்,
15,1992,யூலை,21,ல பறங்கிமடு 07,பேர்,
16.1997,அக்டோபர்,15,ல் பட்டித்திடல் 172, பேர்.
17.1997,யூலை,20,ல் இலுப்பைக்குளம் 06, பேர்.
18.2006,செப்டம்பர்,05,ல் மூதூர் 28, பேர்.
19.2006,செப்டம்பர் 12,ல பொத்துவில் 04, பேர்.
மொத்தமாக 770, முஷ்லிம் மக்கள் இதனால் மரணித்துள்ளனர்.(இந்த தரவு அந்தந்த காலப்பகுதியில் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளில் திரட்டப்பட்டது)

ஆனால் கடந்த 2023, யூன்,23,ம் திகதி வெள்ளிக்கிழமை ஓட்டமாவடியில் முஷ்லிம்கள் வாழும் கிராமத்தில் கல்குடா தியாகிகள் நினைவுத்தூபி குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி தலைமையில் இடம்பெற்றது.

இதில் வேடிக்கை என்ன வெனில் இலட்சக்கணக்காக தமிழினப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மே,18,முள்ளிவாய்கால் நினைவு, கார்திகை 27, மாவீரர்நாள் நினைவு, முஷ்லிம் ஊர்காவல் படையினரை பயன்படுத்தி தமிழர்களை படுகொலைசெய்த அம்பாறை மாவட்ட திராய்மடு படுகொலை நினைவு, வீரமுனை படுகொலை நினைவு, உடும்பன்குளம் படுகொலை நினைவு, சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை, புதுக்குடியிருப்பு, காரைதீவு தொடக்கம் வாழைச்சேனை வரை 1990, ல் இடம்பெற்ற படுகொலை நாட்களை நினைவு கூர முடியாமல் கடந்த காலங்களில் தடுத்த அரசாங்கம் இன்று ஓட்டமாவடியில் யாரை நினைவு கூர இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது இதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாமல் இல்லை. 

ஓட்டமாவடி நினைவுத்தூபி திறப்பு நிகழ்வின்போது கூறப்பட்ட கருத்து மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது தாய்மண்ணையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக கல்குடா முஸ்லிம் பகுதியில் உயிர்நீத்த வீரர்கள், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்கள், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரதேச கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் நினைவுகூரப்பட்டதாக காட்டபட்டது.

உண்மையில் மூன்று சகாப்தமாக உயிர்நீத்த இலட்சக்கணக்கான தமிழர்களை பற்றி அங்கு நினைவு கூரப்படவில்லை இதுவும் தமிழ் முஷ்லிம் மக்களை பிரித்தாளும் நிகழ்ச்சி் நிரலாகவும் தொடர்ந்து தமிழ் முஷ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு வேலைத்திட்டமே இது என்பதை புரிவது நல்லது.

Related Posts