Home Archive by category

'தமிழர்களுக்கு செய்ததை தெற்கு மக்களுக்கு செய்ய முற்பட வேண்டாம்'

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அன்று வடக்கு மக்களுக்கு செய்ததை இன்று தெற்கு மக்களுக்கு செய்ய முற்பட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 போராட்டத்தை தவறாக சித்தரிப்பதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  போராட்டம் மற்றும் போராட்டகாரர்கள் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்பிடப்படுகிறது.

போராட்டத்தை தவறான முறையில் சித்தரித்து முன்னோக்கி செல்வதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். முறைமை மாற்றம் (சிஷ்டம் சேன்ஜ்) போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாடாளுமன்றமும் முழுமையாக மாற்றமடைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்தில் குளித்தமை தவறானது என ஆளும் தரப்பினர் பிரதம கொறடா குறிப்பிட்டார். அவ்வாறாயின் கப்பம் பெறல், மண் அகழ்தல், காடழித்தல் உள்ளிட்ட விடயங்கள் குற்றமில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Related Posts