Home Archive by category

டைட்டானிக் கப்பலை சுற்றி இவ்வளவு ஆபத்துகள் உள்ளனவா?..! வெளியான தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை,  111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளிருந்தே வெடிப்பு நிகழ்ந்து அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.

டைட்டானில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை,  111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.

டைட்டானில் ஓர் அழிவுகரமான வெடிப்பு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்படை கூறுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் வெளியான தகவ்லகளின் படி

உலகின் மிக பேரழிவான கடல் விபத்தாக பார்க்கப்படும் டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது.

கடலின் மேற்பரப்பிலிருந்து 4000 மீட்டர் ஆழத்திற்குச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அங்கே பல அசம்பாவிதங்கள் நடக்கலாம்.

 

மிகக் குறிப்பாக டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 மீட்டர் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அத்தனை பெரிய ஆழத்திற்குள் சூரிய ஒளிகளால் ஊடுருவ முடியாது. இதனால் இப்பகுதியை ‘midnight zone’ என்று அழைக்கின்றனர்.

 

ஆனால் டைட்டானிக் சிதைவுகள் இருக்கும் பகுதிக்குச் செல்வதில் இருள் மட்டுமே சவாலாக இருக்கிறது என்று கூற முடியாது. காரிருளையும் விட பயங்கரமான ஆபத்துகள் நிறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 1911ஆம் ஆண்டு, கிரீன்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் இருந்த பெரிய பனிப்பாறையிலிருந்து, ஒரு பெரிய பனிக்கட்டி உடைந்து மிதக்கத் துவங்கியது. அது மெதுவாக தெற்கே நகர்ந்து படிப்படியாகக் கரைந்தது.

ஓராண்டிற்குப் பிறகு, சௌதாம்ப்டன் நகரிலிருந்து, நியூயார்க் நோக்கி தனது பயணத்தைத் துவங்கியிருந்த டைட்டானிக் கப்பல் அவ்வழியாக வந்துகொண்டிருந்தது.

 

அப்போது கிரீன்லாந்திலிருந்து உடைந்த பனிப்பாறையில் எஞ்சியிருந்த பகுதிகள் அனைத்தும் இந்த டைட்டானிக் கப்பல் மீது மோதின.

நிலவு இல்லாத ஒரு கடும்குளிர் இரவில் 1912ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி இந்த விபத்து நேர்ந்தது. டைட்டானிக் கப்பல் மீது மோதிய அந்தப் பனிப்பாறையின் அளவு சுமார் 1600அடி இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டது.

விபத்து நேர்ந்த 3 மணி நேரத்திற்குள், டைட்டானிக் கப்பல் முழுவதுமாக கடலுக்குள் மூழ்கியது. அப்போது கப்பலில் 1500 பயணிகள் இருந்தனர்.

இந்த பிரமாண்ட டைட்டானிக் கப்பல், தற்போது கடலின் அடி ஆழத்திற்குள் பொதிந்து கிடக்கிறது. கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 3.8கிமீ ஆழத்தில் டைட்டானிக்கின் சிதலங்கள் இருக்கின்றன.

டைட்டானிக்கின் இந்த சிதலமடைந்த பகுதிகள் கனடாவின் நியூஃபவுன்ட்லாண்ட் கடற்கரையிலிருந்து 640கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அங்கே இருக்கும் பனிப்பாறைகள், இன்றும் கப்பல் போக்குவரத்திற்கு ஆபத்து விளைவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில், மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் 1,515 பனிப்பாறைகள் தெற்கே அட்லாண்டிக் கடற்பகுதியில் நுழைவதற்குப் போதுமான அளவு நகர்ந்துள்ளன.

ஆனால் இது எல்லாவற்றையும்விட, தற்போது டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதியே பெரும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது. அதாவது உலகின் மிகப்பெரும் கப்பல் விபத்தாகக் கருதப்படும் டைட்டானிக் விபத்தே, தற்போது மற்ற கப்பல் போக்குவரத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஓஷன்கேட் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘டைட்டன் நீர்மூழ்கி’, அதில் பயணித்த 5 பேருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனது.

இதற்கான தேடுதல் பணிகள் நடந்து வந்த நிலையில், வியாழனன்று அமெரிக்காவின் கடலோர காவல் படை, டைட்டன் நீர்மூழ்கி விபத்திற்குள்ளானதாக அறிவித்துள்ளது.

‘ஆளில்லாத ரோபோடிக் நீர்மூழ்கி, டைட்டனின் சிதறிய பாகங்களை நீருக்கடியில் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படையினர் கூறினர்.

‘டைட்டன் நீர்மூழ்கி வெடித்துச் சிதறியுள்ளது என்றும், டைட்டானிக் தளத்தைச் சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் டைட்டன் நீர்மூழ்கியின் ஐந்து பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது நீர்மூழ்கியின் அழுத்த அறை வெடித்திருப்பதைக் காட்டுவதாகவும்" அமெரிக்க கடலோர காவல் படை கூறியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுமா என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது எனவும் கடலோர படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

Related Posts