Home Archive by category

ரஸ்யாவில் பெரும் குழப்பநிலை : வீதிகளில் இராணுவ வாகனங்கள் : கூலிப்படையினர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம்

ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த    கூலிப்படையினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது

மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை  அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன 

ரஸ்ய தொலைக்காட்சி வழமையான நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி அவசர செய்திகளை வெளியிடுகின்றது.

ரஸ்யாவில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவுடன் இணைந்து உக்ரைன் படையினருக்கு எதிராக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள்; முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்தே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் படைமுகாம் மீது ரஸ்ய படையினர் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர் எங்கள் தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர் அவர்கள் எங்களை ஏமாற்ற முயல்கின்றனர் என வாக்னர் கூலி;ப்படையின் தலைவ பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.

எனினும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஹே சைய் இதனை மறுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து ரஸ்ய பாதுகாப்பு அமைச்சரை தனது படையினர் அகற்றுவார்கள் என எச்சரித்த வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்ய படையினரை தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

இது இராணுவசதிப்புரட்சியில்லை நீதிக்கான பயணம் என தெரிவித்த அவர் தனது குழுவினர் உக்ரைனிலிருந்து ரஸ்யாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

Related Posts